மொட்ட சார் வேற லெவல் பண்றீங்க... சுரேஷை எதிர்த்து மாட்டிக்கொள்ளும் ரியோ!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (13:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் ஒருவர் பலருக்கும் பிரச்சனையாக இருக்கிறாரோ அவர் அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரம். அவரை எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் பிக்பாஸ் கைகொடுத்து காப்பாற்றி கடைசிவரை வீட்டிற்குள் தக்கவைப்பார்.

அந்தவகையில் ஜூலி, ஐஸ்வர்யா தத்தா , வனிதா லிஸ்டில் இந்தமுறை சுரேஷ் சக்கரவர்த்தி. ஆரம்பத்தில் இருந்தே ஷிவானி, அனிதா , ரியோ என தொடர்ந்து வீட்டின் ஏழரை சனியாக இருந்து வருகிறார். போட்டியாளர்களுக்கும் , மக்களுக்கும் அவரை பிடிக்கவில்லை என்றாலும் பிக்பாஸ் ஸ்வாரஸ்யமாக போவதற்கு ஒரே காரணம் மொட்டை அங்கிள் தான்.

ஆரம்பத்தில் இந்த மொட்டலாம் என்ன பண்ண போறாருன்னு நினைச்சோம். ஆனால்,  இப்போ இந்த மொட்ட தான் எல்லாத்தையும் பண்றாரு. அங்கிள் தனியா நின்னு எல்லாருக்கும் டவ் குடுப்பார் போலிருக்கே. இதனாலே ரியோவுக்கு ஒரு விதமான பயம் வந்துவிட்டது. தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் சுரேஷ் கூறிய குரூப்பிசத்தைபற்றி ரியோ சுரேஷை நொண்டி நுங்கு எடுக்கிறார்.

மிஸ்டர் ரியோ,  இரண்டு பேர் சேர்ந்தா அது பேரு குரூப்பிசம் தான்.  நீயும்  நிஷாவும் பண்றது குரூப்பிசம் இல்லாம சிங்கிலிசமா? சுரேஷ் சார் ஒவ்வொரு குழப்பத்துக்கு காரணமாக இருந்தாலும் அவர்தான் இங்கு தல. ஆனால், அது தெரியாத இந்த ஹவுஸ்மேட்ஸ்,  சுரேஷை காலி பண்றேன் சொல்லிட்டு ஒவ்வொருத்தரோட இமேஜ் காலி பண்ணிக்குறாங்க . தம்பி ரியோவிற்கு ஒவ்வொரு நாளும் தலைக்கணம் கூடிக் கொண்டே போகிறது. அது உனக்கு தான்பா டேமேஜ்.

எத்தனை பேரு கேள்வி கேட்டாலும் அசராம அடிக்கும் அசுரன் தான் சுரேஷ். அதனால, தம்பி ரியோ நீ அவரை கேள்வி கேக்குறேன். மடக்கி பிடிக்குறேன்னு பண்ணாமல் கம்முன்னு கெட. நீ அடுத்தவர்களை முட்டாளாக நினைக்கும் முழு முட்டாள். ஆனால், சுரேஷ், தன்னை முட்டாளாக நினைத்து விளையாடும் அதி புத்திசாலி வேடிக்கை பாக்குறதவிட சரியோ தப்போ விளையாடி தோத்து போகலாம் என்று சுரேஷ் சார் மாதிரி இறங்கி அடி. மொட்ட சார் வேற லெவல் பண்றீங்க...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்