நீயே உனக்கு ஆப்பு வச்சுக்க போற - கேமரா முன் நின்று புலம்பும் அனிதா

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (16:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பிரச்சனை திரும்ப திரும்ப போய்க்கொண்டிருக்கிறது. அனிதா மற்றும் சுரேஷுக்கு இடையே ஏற்பட்ட " எச்சி " விவாகரம் நாளுக்கு நாள் உப்பு சப்பு இல்லாத பிரச்னையாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

இதில், அனிதா தான் தேவையில்லாமல் சீன் கிரியேட் செய்கிறார் என ஒரு தரப்பு மக்கள் கூற துவங்கிவிட்டனர். இந்த பிரச்னை எந்த அளவிற்கு போகிறதோ அந்த அளவிற்கு அனிதாவிற்கு கெட்ட பெயர், ஹேட்டர்ஸ் தான் உருவாக போகிறார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் கேமரா முன் நின்று சுரேஷ் ப்ரோமோவில் வருவதற்காக தான் இப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார். அவரை எல்லா ப்ரோமவிலும் போடுங்க என புலம்பியுள்ளார். ஆனால், உண்மையில் அனிதா தான் ப்ரோமோவில் தினமும் வர ஆசைப்பட்டு இப்படி சில்லித்தனமான வேலை செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்