கவினுக்காக பச்சைமிளகாய் சாப்பிட தயங்கிய லொஸ்லியா!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (12:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக தாங்கள் விருப்பப்பட்ட நபரை சேவ் செய்யவேண்டுமனென்றால் பச்சைமிளகாய் சாப்பிடவேண்டும் என்று விவகாரமான விபந்தனை விதிக்கிறார் பிக்பாஸ். 

அதன் படி முதல் ப்ரோமோவில் முதல் ஆளாக தர்ஷன் ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்றினார். அதை தொடர்ந்து வந்துள்ள இந்த இரண்டாவது ப்ரோமோவில் லொஸ்லியா கவின் பெயரை சொல்கிறார். ஆனால் பச்சை மிளகாய் சாப்பிட மிகவும் தயங்குகிறார். ஒருவழியாக வாயில் பச்சைமிளகாயை எடுத்து வைக்கிறார். ஆனால் அவர் கடிக்கிறாரா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்துகொள்வோம். 
 
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் "நாங்க வேணும் என்றால் மிளகாவை சாப்பிடுகிறோம் இப்படி ஒரு காரம் இல்லாத ப்ரோமோவை  போடாதிங்கப்பா" என புலம்பி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்