என்ன நியாமா விளையாடிட்டீங்க எல்லாரும்? - ஓவரா பொங்கும் கவின்!

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (12:44 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய   வீடியோவில் நேரடியாக பைனலுக்கு செல்வதற்காக வீட்டிலிருக்கும் 7 போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 


 
அதாவது, பால் எடுத்துக்கொண்டு எதிரில் இருப்பவர்களை தாண்டி சென்று பாஸ்கெட்டில் போடவேண்டும். இதற்கு  முன் வந்த முதல் ப்ரோமோவில் சாண்டி லொஸ்லியாவை தள்ளிவிட்டதாக கூறி சாண்டியுடன் சண்டையிட்டார் கவின். இதனால் கவின் , சாண்டி , தர்ஷனுக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. 
 
பின்னர் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் " சாண்டி தள்ளிவிட்டதால் ஒழுங்காக கேம் விளையாடாமல் லொஸ்லியாவுடன் சென்று பேசிக்கொண்டிருக்கிறார் கவின். இதனால் கடுப்பான ஷெரின் " அவன் விளையாட கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா இதை எல்லாத்தையும் நிறுத்திடணுமா ..ஆட விரும்பலனா எதுக்கு கேம்கு வரீங்க என்று கேட்கிறார். உடனே கவின் அங்கிருந்து வந்து நான் ஆட தான் வந்தேன் நீ எடுத்துட்ட என கூற... இங்க விளையாடிட்டு இருக்கும் போது நீ அங்க போற என கேட்க அதற்கு கவின் " என்ன நியாயமா விளையாடிட்டீங்க எல்லாரும் என சொல்கிறார். உடனே ஷெரின் பேஸ்கெட்டை எட்டி உதைத்து விட்டு உள்ளே செல்கிறார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்