இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் கமல் ஹாசன், அபிராமி மற்றும் முகன் காதலை டார்கெட் செய்து இது பிரெண்ட்ஷிப்பா என முகம் சுளித்து கொண்டு கேட்கிறார்.
பிரெண்ட்ஷிப்பில் மூன்று வகை இருக்கிறது. அதில் பிரண்ட்ஸ் , க்ளோஸ் பிரண்ட்ஸ் , நம்மள க்ளோஸ் பண்ணுற பிரண்ட்ஸ். இந்த மூன்று வகையான பிரண்ட்ஷிப்பும் வீட்டிற்குள் இருக்கிறது என்று கூற அப்போது , கவின் - சாண்டி, அபிராமி - முகன் , சாக்ஷி - முகன் என ஜோடி ஜோடியாக காட்டுகின்றனர்.
இதில் அபிராமி மற்றும் முகன் இருவருக்கும் பெரிய பஞ்சாயத்தே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாக்ஷியை தான் ஆளையே காலி பண்ற பிரெண்ட்ஷிப் என கமல் கூறியிருப்பதால் இந்த வாரம் சாக்ஷி வெளியேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.