பிக்பாஸ் வீடு ஒரு ஃபைவ் ஸ்டார் ஜெயில்: கமலிடம் நமீதா குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (23:25 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று அனைவரும் எதிர்பார்த்தபடியே நமீதா வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதாவிடம் கமல் பல கேள்விகள் கேட்டு பதில் வாங்கினார். 



 
 
அதில் ஒன்று இந்த பிக்பாஸ் வீட்டில் உள்ள குறையாக என்ன பார்க்கின்றீர்கள் என்று கேட்டதற்கு நமீதா கூறியதாவது: பிக்பாஸ் வீட்டில் இன்னும் கொஞ்சம் அதிகம் வசதி செய்யப்பட்டிருக்கலாம். போதுமான இடம் அதிகம் இல்லை. 
 
எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்கும் பங்கேற்பாளர்களுக்கு ரிலாக்ஸ் செய்யும் வகையில் விளையாட்டு மைதானம் போன்றவை இருந்திருந்தால் மன அழுத்தம் இருக்கும் நேரத்தில் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் இந்த வீடு ஒரு ஃபைவ் ஸ்டார் ஜெயில்' என்று கூறினார். 
அடுத்த கட்டுரையில்