நடிகை பாவனா சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கதை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நடிகை பாவனாவின் முன்னாள் கார் டிரைவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து நடிகை பாவனாவை படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது கடத்தி இரண்டரை மணி நேரம் காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் அவருடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அவர்கள் முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பின்னணியில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இருப்பதாகவும் வதந்திகள் வந்தன. ஆனால் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த காவல் துறை அவர்களின் வாக்குமூலத்தையும் வாங்கி வழக்கை வேகமாக நகர்த்தி செல்கின்றனர்.
இந்நிலையில் நடிகை பாவனாவை திருமணம் செய்ய இருந்த அவரது வருங்கால கணவர் இந்த சம்பவத்திற்கு பின்னரும் அவருக்கு உறுதுணையாக இருந்தாராம். இதனையடுத்து திட்டமிட்டபடி இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என பாவனாவின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.