ட்ரெஸ் போடாம ஒன்னும் வரல.. போட்டிருந்தேன்..! – நடிகை பாவனா விளக்கம்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (09:29 IST)
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாவனா மேல் ஆடை மட்டும் அணிந்து வந்ததாக வெளியான சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பாவனா. தமிழில் தீபாவளி, அசல், வெயில் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார் பாவனா. கடந்த 2017க்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த பாவனா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் நடிகை பாவனாவிற்கு அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பித்தது. இதற்கான நிகழ்ச்சியில் நடிகை பாவனா கலந்து கொண்டபோது அணிந்து வந்த ஆடை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாவனா உள் ஆடை ஏதும் அணியாமல் உடல் பாகங்கள் வெளியே தெரியும்படி ஆடை அணிந்ததாக பலரும் சமூக வலைதளங்களில் அவரை அவதூறாக பேசியதாக தெரிகிறது.

ALSO READ: நாயை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.8 லட்சம் பரிசு! – பிரபல நடிகை அறிவிப்பு!

இதுகுறித்து தற்போது விளக்கம் தெரிவித்து பாவனா பதிவிட்டுள்ளார். அதில் “எனது அன்புக்குரியவர்கள் காயமடையாமல் இருக்க எல்லாம் சரியாகிவிடும் என்று நம்ப நான் முயற்சித்து வரும் நிலையில் எதிர்மறை கருத்துக்கள் மற்றும் அவதூறான வார்த்தைகளால் மீண்டும் என்னை இருளுக்குள் இழுக்க முயற்சிக்கின்றனர்.

இது எனக்கு வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற செயல்களால் மகிழ்ச்சி அடைய விரும்பினால் அவர்களை நான் தடுக்க விரும்பவில்லை. என் தோல் நிறத்தில்தான் ஆடை அணிந்திருந்தேனே தவிர, அவர்கள் விமர்சிப்பது போல நான் ஆடை அணியவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்