இந்த நிலையில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பேரன்பு கொண்ட சகோதரர் டி ராஜேந்தர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றும் அவர் பூரண நலம் பெற்று தமிழுக்கும் தமிழ் திரையுலகிற்கும் தொடர்ந்து சேவையாற்ற இயற்கையை வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்