பரத் நடித்த ‘மிரள்’ அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்!

வெள்ளி, 4 நவம்பர் 2022 (18:38 IST)
பரத் நடித்த ‘மிரள்’ அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்!
நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் நடித்த ‘மிரள்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
தனது மனைவி வாணிபோஜன் மற்றும் குழந்தையுடன் காரில் சென்று பரத் கொண்டிருக்கும் போது திடீரென கார் பஞ்சராகி நிற்கிறது. அந்த இடத்தில் ஏற்படும் ஒரு அமானுஷ்ய சக்தி மற்றும் திரில்லிங்கான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என தெரிகிறது/ இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்