பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு சூனியம் வைத்து விடுவதாக மிரட்டிய பெண்.. போலீசில் புகார்

Mahendran
வெள்ளி, 26 ஜூலை 2024 (14:40 IST)
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு சூனியம் வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த பெண்மணி குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துவரும் சதீஷ்குமார் என்ற சீரியல் நடிகரின் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை வைத்து மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2023ஆம் ஆண்டு அறுபடை முருகன் கோயிலுக்கு சென்ற போது சதீஷ்குமார் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெண்மணி ஒருவர் விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் சதீஷ்குமார் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்ததால் செல்போனில் தொடர்புகொண்டு தொடர் மிரட்டல் செய்து வருவதாகவும் சதீஷ்குமார் புகாரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் ஹீரோ கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சதீஷ்குமார். இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் நிலையில் தான் அவருக்கு தொடர்ந்து சூனியம் வைத்துவிடுவதாக மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது,
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்