ஆடி மாதத்திற்கு முன் அஜித் பட பூஜை

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (12:03 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்தின் பூஜையை இந்த மாதம் 16 -ஆம் தேதிக்கு முன் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


 
 
ஜுலை 16 -ஆம் தேதி ஆடி மாதம் தொடங்குகிறது. ஆடி மாதத்தில் பொதுவாக படங்களுக்கு பூஜை போடுவதில்லை. முன்பெல்லாம், ஆடி மாதம் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்பு ஏவிஎம் ஸ்டுடியோ பரபரப்பாக காணப்படும். தினம் இரண்டு பூஜைகளாவது அங்கு நடக்கும். படம் எடுக்கிறார்களோ இல்லையே... பூஜை போடுவதில் குறைவிருக்காது.
 
ஆடி மாத சென்டிமெண்ட் காரணமாக அதற்கு முன்பே அஜித் படத்துக்கும் பூஜை போடப்பட உள்ளதாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்