அகத்தி கீரை எந்தெந்த நோய்களுக்கு மருந்து ...அறிவோம்!

சனி, 19 மார்ச் 2022 (00:44 IST)
அகத்தி கீரையை உட்கொள்வதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் அதற்காக எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்து தான் என்பதையும் நினைவில் வைத்து கொள்வது நல்லது.
 
அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும். 
 
 
அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.
 
பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல் குறையும்.
 
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு, அதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி நீங்கும்.
 
அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும். 
 
அகத்திக் கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்