மீண்டும் சிகரெட் சர்ச்சையா? விஜய்யின் பீஸ்ட் செகண்ட் லுக் போஸ்டருக்கு எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (13:02 IST)
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் முதல் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. மேலும் படத்தின் தலைப்பு பீஸ்ட் என்றும் வைக்கப்பட்டது. இதையடுத்து இரவு படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் விஜய் ஹெலிகாப்டர்கள் சூழ துப்பாக்கியுடன் நிற்க வாயில் ஒரு புல்லட்டை வைத்து போஸ் கொடுத்தவாறு நின்றிருப்பார்.

இந்நிலையில் பலரும் போஸ்டரை சரியாகப் பார்க்காமல் வாயில் சிகரெட் வைத்திருப்பதாக கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து விஜய் ரசிகர்கள் அது புல்லட் எனக் கூறி விளக்கம் அளித்து வருகின்றனர். ஏற்கனவே துப்பாக்கி மற்றும் சர்கார் ஆகிய படங்களின் போஸ்டர் ரிலீஸ் போது இதுபோல சர்ச்சைகள் உருவானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்