தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியானது.
விமர்சன ரீதியாக இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சோடை போகவில்லையாம். கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே கூட்டணியில் அகாண்டா பார்ட் 2 உருவாக உள்ளதாக 2022 ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியானது.