கேப்டன் டாஸ்க்கில் தோல்வி அடைந்த பாலாஜி: ஷிவானி கூட ஆதரவு தெரிவிக்கலையே!

செவ்வாய், 1 டிசம்பர் 2020 (07:42 IST)
கேப்டன் டாஸ்க்கில் தோல்வி அடைந்த பாலாஜி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்கில் பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் ரம்யா கலந்து கொண்டனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட க்யூப்களை வெளியேற்றி அடித்துத் தள்ள வேண்டும் என்பதுதான் டாஸ்க்
 
ரம்யா ஆரம்பத்திலேயே சோர்ந்து போக ஜித்தன் ரமேசும் பாலாஜியும் கடும் போட்டியாளராக மாறினார்கள். அதன்பிறகு கேப்டன் டாஸ்க்கில் தனக்கு அநீதி நடந்துவிட்டதாக பாலாஜி வாதாடினார் 
 
ரியோ மற்றும் ஆரிஅவரை சமாதானப்படுத்தினார்கள். ஒருவழியாக கடைசி கடைசியில் அவரவர் க்யூப்களை எண்ணியபோது ஜித்தன் ரமேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பாலாஜி,  சனம் மற்றும் ஷிவானியிடம் புலம்பி தள்ளினார்
 
எனக்கு ஏன் ஆரியை நியமனம் செய்தார்கள் என்றும், அவருக்கும் எனக்கும் தான் பிரச்சனை இருக்கிறது என்று தெரியும் என் அல்லவா என்றும், நான் மற்றவர்களுடைய க்யூப்களை தட்டவே இல்லை என்றும் கூறினார் 
 
ஆனால் ஷிவானி கூட பாலாஜிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் பார்த்த அளவில் ரமேஷ் அவருடைய கலர் க்யூப்களை மட்டும்தான் தட்டினார் என்று கூறியதை அடுத்து ஷிவானி கூறியதை கூட ஏற்காமல் கடைசி வரை புலம்பிக்கொண்டே இருந்தார் பாலாஜி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்