தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமித்ஷா குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
அமித்ஷா தமிழகத்திற்கு வந்தது அதிமுகவை கைப்பற்றத்தான் என எதிர்க்கட்சியினர் பேசினர், அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. அதிமுக ஆண்டவன் கட்சி. அதிமுகவை அதிமுகதான் ஆளும். அதிமுகவின் நண்பர் அமித்ஷா. அவர் அதிமுகவிற்கு நல்லதுதான் செய்வார் என தெரிவித்தார்.