இந்த வாரம் டபுள் எவிக்சனா? பரபரப்பு தகவல்!

செவ்வாய், 17 நவம்பர் 2020 (20:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் வரும் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே அனேகமாக கமல்ஹாசனை குற்றஞ்சாட்டி பேசி அனிதா வெளியேறுவார் அல்லது சுசித்ரா வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த வாரம் புதுவரவாக பகல் நிலவு நடிகர் முகமது அஜீம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து விட்டதாகவும் அவர் எந்த நேரத்திலும் பிக்பாஸ் வீட்டுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஷிவானியுடன் ஏற்கனவே நடிகர் முகமது அஜீம் தொலைக்காட்சி தொடரில் நடித்து உள்ளதால் அவர் வந்த பிறகு ஷிவானியை லவ் பண்ணுவதில் அஜிம், பாலாஜி இடையே போட்டி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக ஷிவானிக்கும் பாலாஜிக்கும் முட்டிக் கொண்டு வருவதால் புதிதாக வரும் அஜீம் வரும் நிலையில் பாலாஜி, அஜீம் இடையே வாக்குவாதம் வர்லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் பிக்பாஸ் விதிமுறைகளை மீறிய பாலாஜி வெளியேற்றப்படலாம் என்றும் வதந்திகள் வெளியாகியுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்