'பாகுபலி 2' படம் எப்படி? நெட்டிசன்கள் கருத்து

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (05:50 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் இன்று இந்தியா உள்பட பல நாடுகளில் வெளியாகிறது. நேற்று இரவு ஒருசில நாடுகளில் வெளியானதில் படம் பார்த்து கருத்து கூறிய நெட்டிசன்கள் குறித்து தற்போது பார்ப்போம்



 


கிறிஸ்டோபர் கனகராஜ் என்பவர் தனது டுவிட்டரில் 'மிக அருமையான இசை, ஆச்சரியபட வைக்கும் சண்டைக்காட்சிகள், மாஸ் இண்டர்வெல் காட்சி,  முதல் 30 நிமிடங்களை யாரும் மிஸ் செய்ய வேண்டாம், சத்யராஜ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணனின் நடிப்பு அபாரம், ஆனால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எதிர்பார்த்த அளவு இல்லை' என்று கூறியுள்ளார்.

கமால்ஜி என்பவர் கூறியபோது, 'டைட்டில் கார்டை யாரும் மிஸ் செய்துவிட வேண்டாம். அனுஷ்காவின் சண்டைக்காட்சி, பின்னணி இசை, இண்டர்வலில் வரும் டுவிஸ்ட் ஆகியவை சூப்பர் என்று கூறியுள்ளார்.

பிரபாஸ் ரசிகர்களுக்கு சரியான விருந்து. பின்னணி இசை மிக அபாரம் என்று ஃபார்தீன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் பலர் பாசிட்டிவ் விமர்சங்கள் தெரிவித்துள்ளதால் படம் சூப்பர் சக்ஸஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்