பாபா ரி ரிலீஸ்… உலகம் முழுக்க முதல்நாள் வசூல் எவ்வளவு?

ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (14:22 IST)
ரஜினியின் பாபா திரைப்படம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு நேற்று உலகம் முழுவதும் டிசம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று பாபா படம் ரி ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் படத்தில் இருந்து அரைமணிநேரம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பல திரைகளில் நேற்று வெளியான நிலையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மற்ற பொதுவான சினிமா ரசிகர்கள் இந்த படத்துக்கு ஆதரவளிக்கவில்லை. இந்நிலையில் படத்தின் சர்ச்சைக்குரிய க்ளைமேக்ஸ் காட்சி இப்போது மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 100 திரையரங்குகளில் வெளியான பாபா திரைப்படம் நேற்று முதல்நாளில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 75 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்