காதல் தேசம் படத்தை ரி ரிலீஸ் செய்த கே டி குஞ்சுமோன்!

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:37 IST)
1996 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன காதல் தேசம் திரைப்படம் இப்போது மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது. புதுமுக இயக்குனர் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்தார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

அதுமட்டுமில்லாமல் அவர் அதன் பிறகு தயாரித்த எல்லா படங்களுமே அதிக பட்ஜெட் படங்கள்தான். அப்படி அவர் தயாரித்து 1996 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம்தான் ‘காதல் தேசம்’ இந்த படத்தை இயக்குனர் கதிர் இயக்க, வினீத், அப்பாஸ் மற்றும் தபு ஆகியோர் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் அப்போது சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தமிழைப் போல தெலுங்கிலும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இப்போது காதல் தேசம் படத்தை கே டி குஞ்சுமோன் பிரேமதேசம் என்ற பெயரில் ரி ரிலீஸ் செய்துள்ளார். விரைவில் தமிழிலும் ரி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்