96 படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் ஆரவார பதில்

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (13:53 IST)
96 படத்தின் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் என்பது பயங்கரமாக இருக்கிறது.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் 96. இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
 
இப்படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வரும் ரசிகர்கள் இந்த படத்தைப் பற்றி ஏககோகமாக புகழ்ந்து பேசியுள்ளனர். ஒருவரிடமும் இருந்து நெகட்டிவான பதில் வரவில்லை.
 
90ஸ் கிட்ஸின் அற்புதமான பள்ளி வாழ்க்கையை இயக்குனர் கண் முன் நிறுத்தியிருக்கிறார் என்றும் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பு வேற லெவல் என்றும் ரசிகர்கள் கூறினர். இந்த படத்தை பார்த்த பிறகு எங்களது பள்ளி நண்பர்களை தேடிபோய் பார்க்க வேண்டும் என தோன்றுகிறது எனவும் கூறியுள்ளனர். 
 
இந்த படத்தில் வில்லன் இல்லை, சண்டைக்காட்சி இல்லை, விறுவிறுப்பு இல்லை ,ஆனாலும் படம் டாப் டக்கர் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்