இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இன்னொரு படத்தின் காப்பிதான் அந்தப் படம் என்று சொல்லப்பட்டாலும், எல்லோருக்கும் படம் பிடித்திருந்தது.
ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் இரண்டாவது படத்திலேயே விஜய்யை ஹீரோவாக கமிட் செய்தார் அட்லீ. விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான ‘தெறி’யும் இன்னொரு படத்தின் காப்பி என்று கூறப்பட்டது. ஆனாலும், படத்தின் ரிசல்ட்டால் மகிழ்ந்துபோன விஜய், அடுத்த பட வாய்ப்பையும் அட்லீக்கு அளித்தார்.
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ள ‘மெர்சல்’, நேற்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவாக இருக்க, அடுத்த பட வாய்ப்பையும் அட்லீக்கு அளித்துள்ளார் விஜய் என்கிறார்கள்.