ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இதற்கிடையில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.