பாலா படத்தில் இருந்து அதர்வா நீக்கம்… பின்னணி என்ன?

சனி, 4 செப்டம்பர் 2021 (16:37 IST)
இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் இருந்து அதர்வா நீக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார்.

இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். முதலில் இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் சூர்யா ஒரு கௌரவ வேடத்திலேயே நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது சூர்யா மட்டும்தான் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதர்வா நடிக்கும் படத்தை பின்னர்தான் பாலா இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சூர்யா படத்துக்கான வேலைகளை பாலா தொடங்கிவிட்ட நிலையில் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்