கேரளாவில் 11 ஆம் வகுப்பு தேர்வு நடத்த தடை!

சனி, 4 செப்டம்பர் 2021 (10:55 IST)
கேரளாவில் ஊரடங்கு முழுமையாக விதிக்கப்படாததால் அங்கு தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. 
 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 30 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கேரளாவில் தற்போது ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வார நாட்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கேரளாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பால் மீண்டும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என கேரள முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 
 
இதனிடையே ஊரடங்கு முழுமையாக விதிக்கப்படாததால் அங்கு தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. இருப்பினும் அம்மாநில சுகாதாரத்துறை 10 நாட்களில் தொற்று பரவல் குறையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் கேரளாவில் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்