இனி பாருங்க என் ஆட்டத்த..! TTF வாசனின் அனல் பறக்கும் IPL பட ட்ரெய்லர்!

Prasanth K

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:15 IST)

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் நடிப்பில் தயாராகியுள்ள ஐபிஎல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

தமிழக இளைஞர்களிடையே மிகவும் புகழ்பெற்ற பைக் ரைடராகவும், யூட்யூபராகவும் இருந்து வந்தவர் டிடிஎஃப் வாசன். ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 

 

மஞ்சள் வீரன் என்ற படத்தில் டிடிஎஃப் நடிப்பதாக இருந்த நிலையில் இயக்குனர் செல் அம், அந்த படத்தில் இருந்து வாசனை நீக்குவதாக அறிவித்தார். அதன் பின்னர் பல காலம் கழித்து ஒருவழியாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார் டிடிஎஃப் வாசன்.

 

கருணாநிதி என்பவர் எழுதி இயக்கியுள்ள படம் இந்தியன் பீனல் லா (ஐபிஎல்). இதில் ஹீரோவாக டிடிஎஃப், ஹீரோயினாக இன்ஸ்டா புகழ் குஷிதா மற்றும் கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு வெளியான நிலையில் டிடிஎஃப் ரசிகர்களை உற்சாகப்பட வைக்கும் அளவுக்கு ரேஸ் காட்சிகள், ரிவெஞ்ச் வசனங்கள் என ட்ரெய்லர் அதிர்கிறது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்