ரஜினி & கமல் இணையும் படம் பற்றி அப்டேட் கொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!

vinoth

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:15 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் தங்கள் கெரியர் தொடக்கத்தில் ஒன்றாக இணைந்து இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படிதான் என பல படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் பிரிந்து தனித்தனி வழியில் பயணிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 45 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் அவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் நடிக்கவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் தீராத ஆசையாக இருந்தது. இந்நிலையில்  ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நீண்ட காலம் கழித்து படம் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘கமலுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளது. ஆனால் நல்ல கதையும் இயக்குனரும் அமையவேண்டும்’ எனக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் “அப்பா ராஜ்கமல் பிலிம்ஸுக்காக ஒரு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதில் கமல் சாரும் நடிக்கவுள்ளார். அந்த படத்துக்கான அப்டேட்களை அவர்களே விரைவில் அறிவிப்பார்கள்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்