அஸ்வின் ஜோடியாக இரண்டு நடிகைகள்: யார் யார் தெரியுமா?

வெள்ளி, 9 ஜூலை 2021 (12:18 IST)
அஸ்வின் ஜோடியாக இரண்டு நடிகைகள்: யார் யார் தெரியுமா?
குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் இரண்டு நாயகிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் தற்போது ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ரவீந்திரன் தயாரிக்கும் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அவர்களில் ஒருவர் பெங்களூரைச் சேர்ந்த அவந்திகா என்றும் இன்னொருவர் சென்னையைச் சேர்ந்த தேஜூ அஸ்வினி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருவருமே மாடல்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களில் நடித்து உள்ளனர் என்றும் இயக்குனர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது ஒரு முக்கோண காதல் கதை என்றும் இரண்டு நாயகிகளும் சம அளவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த படத்தில் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்பட பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பூஜை நடைபெற்றதை அடுத்து இன்று முதல் படப்பிடிப்பு நடக்கும் என்றும் முதல்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்