அசோக் செல்வன் & விக்னேஷ் சிவன் இணையும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth

வெள்ளி, 15 மார்ச் 2024 (08:01 IST)
நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கிய திரைப்படம் போர்த் தொழில். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைக் குவித்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது. 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்துக்காக இணைகின்றனர். இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அனேகமாக இந்த படம் அவர்களின் முதல் படமான போர்த்தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தை மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. அதில் முன்னணி தயாரிப்பாளரான டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரனும் ஒருவராக இணைந்துள்ளார் என சொல்லப்படுகிறது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் அசோக் செல்வனை வைத்து ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்