ஆர்யா மீது சேற்றை வாரி இரைத்த நெட்டிசன்ஸ்… அவதூறு வழக்கு தொடர முடிவு!

புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
நடிகர் ஆர்யா போல நடித்து மோசடி செய்த இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யா. இவரைப் போல் ஒரு பெண்ணிடம் பேசி பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபட்ட இருவரை போலீஸார்  கைது செய்துள்ளனர். சென்னையில் நடிகர் ஆர்யாவைப் போல் சமூக வலைதளங்களில் பெசி, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்துள்ள ஒரு பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக இந்த பண மோசடி சம்மந்தமாக ஆர்யா நேரடியாக காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். அப்போது அவர் மேல் தவறு இல்லை என்று தெரிய வந்த பின்னர்தான் சைபர் க்ரைம் போலிஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்தனர். இந்த கைதுக்குப் பின்னர் ஆர்யா ‘சென்னை ஆணையருக்கு மிகவும் நன்றி. நான் சொல்ல முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆர்யாவின் வழக்கறிஞர் இந்த பிரச்சனையில் உண்மைத் தன்மை தெரியாமல் ஆர்யா மீது மோசமான விமர்சனங்கள் சமூகவலைதளங்களிலும் யுடியுபிலும் வைக்கப்பட்டன. அவர்கள் மேல் எல்லாம் அவதூறு வழக்கு தொடர உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்