ஆர்யாவின் 34வது படம்: இயக்குனர், நாயகி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (14:31 IST)
ஆர்யாவின் 34வது படம்: இயக்குனர், நாயகி அறிவிப்பு!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. 
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஆர்யா என்பதும் அவர் நடித்த சார்பாட்டா பரம்பரை உள்பட பல திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஆர்யாவின் முப்பத்தி நான்காவது படத்தை இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த படத்தில் சித்தி இட்னானி என்பவர் நாயகியாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜிவி பிரகாஷ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தை டிரம்ஸ்டிக்  நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்