சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் டெடி படம நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து அவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் பூஜையோடு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல இந்த படமும் சயின்ஸ்பிக்ஷன் கதையாக உருவாகி வருகிறது.