இந்நிலையில் இந்தியா சார்பாக லண்டனில் நடந்த 1450 கி.மீ தூர நெடும்பயண சைக்கிளிங் போட்டியில் ஆர்யாவின் அணி கலந்துகொண்டது. அதில் போட்டி தூரத்தை ஆர்யாவின் அணியினர் கடந்துள்ளனர். இது சம்மந்தமாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ள ஆர்யா “என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள். எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.