‘மாநாடு’ படத்தில் நடிக்க வேண்டாம்: அரவிந்த் சாமிக்கு ரசிகர்கள் வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (22:06 IST)
மக்கள் திலகம் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி ’தலைவி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவருடைய கெட்டப் இன்று வெளியானது என்பதும் தெரிந்ததே. இந்த கெட்டப் மற்றும் வீடியோ வெளியானவுடன் அரவிந்த்சாமியை எம்ஜிஆர் போலவே மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். இனி அரவிந்த்சாமி வெளியே வந்தால் அவரை எம்ஜிஆர் என்றே அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அவர் கேரக்டரில் ஒன்றி எம்ஜிஆர் போலவே அச்சு அசலாக நடித்துள்ளார். 
 
இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தில் ஒரு டெரர் வில்லன் கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளிவரும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் எம்ஜிஆர் போன்ற புனிதமான கேரக்டரில் நடித்து விட்டு வில்லன் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அரவிந்த்சாமிக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் அரவிந்த்சாமி இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்