கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல தமிழ் ஹீரோ!

Webdunia
வியாழன், 6 மே 2021 (13:21 IST)
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல தமிழ் ஹீரோ!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது 
 
குறிப்பாக திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் 
 
ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட தங்களது புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் தற்போது பிரபல தமிழ் ஹீரோ அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் சமுதாயத்தின் கடமை உணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்