அஜித் சாருக்கு யாரும் போட்டி கிடையாது: ‘வணங்கான்;’ நாயகன் அருண்விஜய்

Mahendran

செவ்வாய், 19 நவம்பர் 2024 (13:13 IST)
அஜித் நடித்த விடாமுயற்சி அல்லது குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஒன்று வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் அதே தினத்தில் அருண் விஜய் நடித்த வனங்கான் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து அஜித்துடன் மோதுகிறாரா அருண்விஜய் என்ற கேள்விக்கு அஜித் சாருக்கு யாரும் போட்டி கிடையாது என்று அருண் விஜய் பதில் அளித்துள்ளார்.
 
அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பொங்கல் தினத்தில் அஜித் படம் வெளியாவது உறுதி என்று கூறப்பட்ட நிலையில், அஜீத்துடன் அருண் விஜய் மோதுகிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதுகுறித்த கேள்விக்கு பதில் கூறிய அருண் விஜய், "அஜித் அவர்களுக்கு யாரும் போட்டி கிடையாது. அவரின் ரசிகர்களும் என்னை நேசிக்கிறார்கள். ஒருவேளை அவரின் படமும் பொங்கலுக்கு ரிலீசானால், அதன் மூலம் எங்களுக்கும் ஒரு வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
 
இருப்பினும், அஜித் மற்றும் பாலா இடையே பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பகைமை இருந்த நிலையில், அந்த பகைமையை தீர்த்துக் கொள்ளவே பொங்கல் தினத்தில் தனது படத்தை வெளியிடுவதாக சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்