அருண் விஜய் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் புது படம்?

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:33 IST)
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ரிலீஸ் ஆகி  சமீபத்தில் ஏழு வருடங்கள் நிறைவடைந்தது. அதையடுத்து ஏழு வருட கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கிய ‘என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

இந்நிலையில் இப்போது கௌதம் மேனன் அருண் விஜய் கூட்டணியில் விக்டர் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அருண் விஜய்யின் அடுத்த படமாக விக்டர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்