பிறந்த நாளன்று இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்!

சனி, 20 நவம்பர் 2021 (16:47 IST)
அருண் விஜய் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்துள்ளார்.

பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ’யானை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர் தனது ரசிகர்களுடன் சேர்ந்து ரத்த தானம் செய்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்