மீண்டும் தூசு தட்டப்படும் அருண் விஜய்யின் ‘பார்டர்’ திரைப்படம்!

vinoth

புதன், 11 டிசம்பர் 2024 (09:04 IST)
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கிய திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவான படம் 2022 ஆம் ஆண்டே ரிலீஸ் அறிவிக்கப்பட்டும் பல காரணங்களால் இன்னும் ரிலீஸாகவில்லை. ஆல் இன் பிக்சர்ஸ் சார்பாக ஜெயக்குமார் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமாருக்கும் அருண் விஜய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பார்டர் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அருண் விஜய்யின் வணங்கான் படம் ரிலீஸ் ஆனதும் பார்டர் திரைப்படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்