வெற்றிமாறன் கதை… கௌதம் மேனன் இயக்கம்… ஹீரோ சிம்பு – தயாராகும் அதகளமான கூட்டணி!

vinoth

செவ்வாய், 10 டிசம்பர் 2024 (09:19 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதித்துள்ளார். மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர்  இயக்கி வருகிறார். இந்த படத்தை மம்மூட்டியே தன்னுடைய ‘மம்மூட்டி கம்பெனி’ மூலமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் அடுத்து ஒரு தமிழ்ப் படத்தை இயக்கவுள்ளாராம் கௌதம்.

இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க, வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்துக்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. வித்தியாசமான இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்