’தளபதி விஜய்’ படத்தின் ஆடியோ உரிமை இத்தனை கோடியா? ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (17:32 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்துக்கான ஆடியோ உரிமையை ரூ 5 கோடிக்கு விற்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின்பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ஷாரூக்கான் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள தகவென்னவென்றால், தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்கள். 
 
இந்நிலையில் தற்பொழுது இப்படத்தைக் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அட்லி, ஏ. ஆர், ரஹ்மான் கூட்டணியில் உருவான மெர்சல் படத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது தளபதி 63 படத்திற்குக் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
எனவே இப்படத்தின் ஆடியோ உரிமை விலையாக ரூ. 5 கோடியை நிரண்யித்துள்ளதாகவும்  இதற்கு பல முன்னணி ஆடியோ நிறுவனங்களிடையே பலத்தை போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்