மறைந்த முதல் ஜெயலலிதாவின் வழக்கை வரலாற்றை பல இயக்குனர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இயக்க முந்தியடித்தனர். ஆனால், அந்த வாய்ப்பை இயக்குனர் ஏ.எல் விஜய் மிகும் துல்லியமாக பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் இளமைக்காலம் முதல் முதுமைக்காலம் வரை நான்கு தோற்றங்களில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
"தலைவி" பெயரில் உருவாகிவரும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகள் ஒருவரான கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். இந்தி, தமிழ் , தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவின் தோற்றத்தை பெறுவதற்காக அமெரிக்க சென்று டெஸ்ட் லுக் எடுத்தார் கங்கனா. சமீபத்தில் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி கங்கானாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்நிலையில் தற்போது படத்தை குறித்த சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் ஸ்வாமி நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. எனவே கூடிய விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.