அரவிந்த் சாமி தொடுத்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்!

vinoth

செவ்வாய், 18 ஜூன் 2024 (09:22 IST)
மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படம் தமிழில் அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை முருகன் குமார் என்பவர் தயாரித்திருந்தார்.

இந்த படத்துக்காக அரவிந்த் சாமிக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்ட நிலையில் 30 லட்ச ரூபாய் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரிலீஸின் போது அவரிடமே முருகன் 35 லட்சம் ரூபாய் கடனும் வாங்கியுள்ளார். ஆனால் படம் ரிலீஸான பின்னரும் இந்த பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. மேலும் அரவிந்த் சாமி சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையையும் வருமான வரித்துறைக்கு அவர் செலுத்தவில்லை.

இது சம்மந்தமாக அரவிந்த் சாமி தொடுத்த வழக்கில் முருகன் குமார் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் அதை செய்யாமல் காலதாமதம் ஆக்கியதால் நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முருகனின் வழக்கறிஞர் அவரிடம் சொத்துகள் எதுவும் இல்லை என வாதாட, அப்படியானால் அவர் தான் திவாலாகி விட்டதாக அறிவிக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்