என் அப்பாவின் பயோபிக்கை இயக்குவேனா?... ஸ்ருதிஹாசன் அளித்த நேர்மையான பதில்!

vinoth

செவ்வாய், 18 ஜூன் 2024 (07:46 IST)
கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல இசைஞானி இளையராஜாவின் பயோபிக் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் அவர்களின் பயோபிக்கும் எடுக்கப்பட வேண்டும் என திரையுலகினர் ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தன்னுடைய தந்தையான கமல்ஹாசன் பயோபிக் எடுக்கப்படுமா, அப்படி எடுக்கப்பட்டால் அதை அவர் இயக்குவாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “நான் என் அப்பாவின் பயோபிக்கை இயக்கினால், அது ஒரு சார்பாகதான் இருக்கும். என் அப்பாவின் பயோபிக்கை இயக்கும் அளவுக்கு பல திறமைசாலிகள் உள்ளனர்” என திறந்த மனதோடு பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்