'அறம்' இயக்குனரின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (12:34 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபிநயினார் இயக்கிய முதல் படமான 'அறம்' திரைப்படத்தை திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் பாராட்டினர். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது.
 
அதேபோல் கடந்த வெள்ளியன்று வெளியான பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
 
இந்த நிலையில் அறம் இயக்குனர் கோபியும், ஜிவி பிரகாஷூம் ஒரு படத்தில் இணைகின்றனர். வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் கால்பந்து வீரராக நடிக்கின்றார். விறுவிறுப்பாக திரைக்கதையுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்