மாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து சுசீந்திரன், தான் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகத்தில் வசனம் எழுதி வருகிறார். இதற்கிடையில், சத்தமே இல்லாமல் ஒரு படத்தையும் இயக்கிக் கொண்டு வருகிறார். இப்படத்தை அன்னை பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரித்துள்ளார்.
இப்படத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக தெலுங்கு நடிகை மெஹரீன் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் இணைந்து பாடல்களை எழுதுகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். படத்திற்கு அறம் செய்து பழகு என்று தலைப்பிட்டுள்ளனர். வருகிற ஜுன் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.