அதிகமாக வேலை செய்யும்போது நாம் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

vinoth

புதன், 3 செப்டம்பர் 2025 (11:05 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். அதில் “தங்களுக்குள் நிரப்ப முடியாத இடைவெளி விழுந்துவிட்டதாக” அவர் கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவாகரத்து முடிவை ஏ ஆர் ரஹ்மானும் ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து ஏ ஆர் ரஹ்மான் மீது சில அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் சாய்ரா பானுவே ரஹ்மான் போன்ற ஒரு மனிதரைத் தன் வாழ்வில் சந்தித்ததில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ரஹ்மான் அளித்த ஒரு நேர்காணலில் வேலை-குடும்ப சமநிலைப் பேணுதல் பற்றி பேசியுள்ளார். அதில் “நாம் நிறைய திட்டங்களைத் தீட்டுகிறோம். ஆனால் எல்லாம் ரத்தாகிவிடுகிறது. நான் என் வேலையில் தண்ணீரைப் போல காலவோட்டத்தில் ஓடினேன். முன்பெல்லாம் நான் வெறிபிடித்தவன் போல வேலை செய்வேன். அப்படி இருக்கும் போது நாம் சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போது நான் குடும்பத்துடன் நேரம் செலவிடவும், தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்