அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி நடித்த தசரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அதேக் கூட்டணி தி பாரடைஸ் படத்துக்காக இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. சுதாகர் செருகுரி இந்த படத்தைத் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் அறிமுக போஸ்டர் மற்றும் முன்னோட்டம் ஆகியவை வெளியானதில் இருந்தே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பேன் இந்தியா படமாக பாரடைஸ் படத்தை எடுத்து வரும் படக்குழுவினர் தற்போது ஹாலிவுட்டிலும் படத்தை வெளியிட முயற்சி செய்து வருகின்றனர்.
இது சம்மந்தமாக சமீபத்தில் ஹாலிவுட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் ஹாலிவுட் நடிகர் ஒருவரை இந்த படத்தில் நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.