இந்திய எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை முன்னிட்டு, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தின் மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"கலை காத்திருக்கலாம், இந்தியா முதலில்.
நமது எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளும், தற்போது நிலவுகின்ற பாதுகாப்பு சூழ்நிலையும் காரணமாக, தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “எல்லையில் தைரியமாக களத்தில் நின்று நாட்டை பாதுகாக்கும் எங்கள் வீரர்களின் அர்ப்பணிப்பை நினைத்து, இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த நேரத்தில், நமது எண்ணங்கள் நாட்டைப் பாதுகாக்கும் வீரர், வீராங்கனைகளோடு உள்ளது. நாம் ஒற்றுமையோடும் பொறுமையோடும் பதிலளிக்க வேண்டிய நேரம் இது. கொண்டாட்டம் இடம் அளிக்க வேண்டும் சிந்தனைக்கென," என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.